அமெரிக்காவில், சிறிய ரக விமானம் ஒன்று மின்கம்பியில் உராய்ந்தபடி நெடுஞ்சாலையில் வந்து விழும் காட்சி ஒன்று சாலையில் பயணித்துக்கொண்டிருந்த காரில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.
ஜார்ஜியாவிலுள்ள Kennesaw என்ற இடத்தில் பயணித்துக்கொண்டிருந்த Natasha Williams என்னும் பெண்ணின் காரில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் சிக்கிய அந்த காட்சியில், அந்த விமானம் மின்கம்பியில் உராய்வதால் தீப்பொறி உருவாகுவதையும், கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்த சிறிய ரக விமானம் சாலையில் வந்து மோதுவதையும் காணலாம்.
இதில் ஆச்சரியப்படத்தக்க விடயம் என்னவென்றால், அந்த விமானத்தை இயக்கிய விமானி உயிர் தப்பியதுடன், தானாகவே விமானத்திலிருந்து வெளியேறி, அவரே மருத்துவமனையையும் சென்றடைந்ததுதான்!
நடந்தது என்னவென்றால், அந்த விமானத்தின் எஞ்சினில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளதை அறிந்த அந்த விமானி, அவசரமாக விமானத்தைத் தரையிறக்க முயற்சித்துள்ளார். ஆனால், அந்த விமானம் மின்கம்பியில் உராய்ந்ததைத் தொடர்ந்து தரையில் விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நெடுஞ்சாலை மூடப்பட்டதுடன், சேதமடைந்த மின் கம்பியையும் மின்துறை ஊழியர்கள் வந்து சரி செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெடரல் விமானப்போக்குவரத்து நிர்வாக அமைப்பு விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.
Plane crash caught on Natasha Williams’ dash cam on Cobb Parkway in Kennesaw, GA earlier. Video taken by Natasha Williams. pic.twitter.com/Ajo7mB7pKd
— Chad (@ChadBlue83) April 7, 2022