கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ளது மாரியம்மனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு ஏசி இயங்கி கொண்டிருந்துள்ளது. அப்போது நள்ளிரவு 12:30 மணியளவில் அந்த வீட்டின் படுக்கை அறையில் இருந்த திடீரென வெடித்து சிதறியது.
இந்த பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட் பிரசாந்த் (42), அவரது மனைவி டி.சந்திரகலா (38), இவர்களது மகன் ஆத்விக் (6), மகள் பிரேரனா (8) தம்பதி, என நான்கு பேரும் உயிரிழந்தனர்.
நள்ளிரவு நேரம் என்பதால் வீட்டில் அனைவரும் உறங்கி்க் கொண்டிருந்ததால், விபத்து ஏற்பட்டபோது அவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இக்கொடூர விபத்து குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஏசி வென்ட்டில் இருந்து வாயு கசிந்ததன் விளைவாக மின்கசிவும் ஏற்பட்டு வீடு முழுவதும் தீ்க்கிரையாகிய நான்கு பேரும் உடல் கருகி இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே, இந்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது
கோடை காலம்
என்பதால், வீடுகளில்
ஏசி பயன்பாடு
அதிகரித்து வரும் நிலையில், இந்த விபத்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.