பிரபல ஐரோப்பிய நாடான போலந்துக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.
போலந்து தூதரக மற்றும் துணைத்தூதரக ஊழியர்கள் 45 பேர் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ரஷ்ய தூதர்களை போலந்து வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் உள்ள போலந்து தூதரக ஊழியர்கள் ‘persona non grata’
என்று அறிவிக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியது.
‘persona non grata’ என்பது வெளியுறவுத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சட்ட சொல் ஆகும். இது ஒரு வெளிநாட்டு நபர் நாட்டிற்குள் நுழைவதற்கு அல்லது தங்குவதற்கு எதிரான தடையைக் குறிக்கிறது.
மார்ச் மாதம், ரஷ்ய உளவுத்துறைக்காக பணியாற்றுவதாக சந்தேகிக்கப்படும் 45 ரஷ்ய தூதர்கள் நாட்டை விட்டு வெளியேற போலந்தின் வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.
‘ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி’யா…! அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ரஷ்யா கூறியது.
லாட்வியா, எஸ்டோனியா மற்றும் லிதுவேனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகளில் இதே போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்ததை தொடர்ந்து, போலந்தும் ரஷ்ய தூதர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
லாட்வியா, எஸ்டோனியா மற்றும் லிதுவேனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகளிலிருந்து மொத்தம் 10 ரஷ்ய தூதரங்கள் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.