டெல்லியில் இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 பேருக்கு ரூ.5,500 மானியம் – போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லட்

டெல்லியில் இ-சைக்கிள் வாங்குவோருக்கு மானியம் வழங்கப்படுமென அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லட் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு இ – சைக்கிள் வாங்கும் முதல் பத்தாயிரம் பேருக்கு 5 ஆயிரத்து 500 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அதில் முதல் ஆயிரம் பேருக்கு கூடுதல் மானியமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், வர்த்தக பயன்பாட்டிற்கான சரக்கு இ – சைக்கிள்கள் மற்றும் மின் வண்டிகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மானியம் முன்பு தனிப்பட்ட முறையில் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது, நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.