உக்ரைன் ரயில் நிலையம் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல், ரஷ்ய கொடூரனுக்கு வரம்புகளே இல்லை என்பதை காட்டுகிறது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெவித்துள்ளார்.
உக்ரைனின் Kramatorsk-ல் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், KramatorsK ரயில் நிலைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் யாரும் இறக்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி, குறைந்தபட்சம் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
சொந்த மக்களை கொன்று குவித்த உக்ரைன் ராணுவம்? ரஷ்ய பரபரப்பு தகவல்
போர்க்களத்தில் எங்களை எதிர்த்து நிற்கும் வலிமையும் தைரியமும் இல்லாததால், அவர்கள் பொதுமக்களை கொல்கிறார்கள்.
ரஷ்ய ஒரு வரம்புகளே இல்லாத கொடூரன். அது தண்டிக்கப்படாவிட்டால், ஒருபோதும் அடங்காது என ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.