இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, முதலீட்டாளர்களுக்கு பெரும் நிம்மதியினை கொடுக்கும் விதமாக பெரியளவிலான மாற்றம் ஏதும் இல்லை.
இன்று வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டால் அது சந்தையில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். சென்செக்ஸ், நிஃப்டி பலத்த வீழ்ச்சியினை காணலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வட்டி விகிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. அதேசமயம் சந்தையிலும் பெரியளவில் மாற்றமில்லை. சொல்லப்போனால் சந்தையில் பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சரிவினைக் காணவில்லை என்பது மிக நல்ல விஷயமாக பார்கப்படுகிறது.
ஆர்பிஐ முடிவுகள் எதிரொலி.. ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்..!
அன்னிய முதலீடுகள்
கடந்த ஏப்ரல் 7 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 374.89 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 105.42 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்எஸ்இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இது சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இன்று காலம் ப்ரீ ஓபனிங்கிலேயே சென்செக்ஸ் 230.93 புள்ளிகள் அதிகரித்து, 59,265.88 புள்ளிகளாகவும், நிஃப்டி 65.40 புள்ளிகள் அதிகரித்து, 17,704.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 219.99 புள்ளிகள் அதிகரித்து, 59,254.94 புள்ளிகளாகவும், நிஃப்டி 76.60 புள்ளிகள் அதிகரித்து, 17,716.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1677 பங்குகள் ஏற்றத்திலும், 297 பங்குகள் சரிவிலும், 53 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
கவனிக்க வேண்டிய பங்குகள்
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் வங்கி பங்குகள், எண்ணெய் நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், எம் & எம், என்.டி.பி.சி, டாடா குழும பங்குகள், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன. இது தவிர சோலமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பைனான்ஸ் நிறுவனம், பஞ்சாப் சிந்த் வங்கி, ரயில் விகாஸ் நிகாம், ஷோபா, சிம்பிளக்ஸ் இன்ஃப்ராட்ரக்சர், சோனாட்டா சாப்ட்வேர்,ஜேகே எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட பங்குகளும் கவனம் கொள்ள வேண்டியவையாக உள்ளன.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. சரிவிலேயே காணப்படுகின்றன. எனினும் பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஹெல்த்கேர் உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலேயே காணாப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள கிரசிம், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், கோல் இந்தியா, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஐஓசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சிப்லா, என்.டி.பி.சி, ஹெச்.டி.எஃப்.சி, டெக் மகேந்திரா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டைட்டன் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டெக் மகேந்திரா, என்.டி.பி.சி, டிசிஎஸ், சன் பார்மா, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சற்றே ஏற்றத்தில் தொடங்கிய சந்தையானது, தற்போது 11.16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 116.54 புள்ளிகள் குறைந்து, 58,918.14 புள்ளிகளாகவும், நிஃப்டி 15.11 புள்ளிகள் குறைந்து, 17,624.45 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: indices flat as RBI maintains rate
opening bell: indices flat as RBI maintains rate/முதலீட்டாளார்கள் பெரும் நிம்மதி.. வட்டி மாற்றமின்மையால் மாற்றமின்றி காணப்படும் சென்செக்ஸ், நிஃப்டி!