மாஸ்கோ: உக்ரைன் மீதான போரில், குறிப்பிடத்தக்க’ அளவில் இழப்புகளை ஏற்பட்டுள்ளது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள தாக்குதல் 44 நாட்களாக தொடர்கிறது. பல நகரங்களை ரஷ்யா படைகள் குண்டுவீசி அழித்து வந்தாலும், முழுமையாக கைப்பற்ற முடியாத நிலையே தொடர்கிறது. ரஷியா படைகள் கைப்பற்றிய நகரங்களை உக்ரைன் மீட்டு வருகிறது.
இதனால் ஆவேசம் அடைந்துள்ள ரஷிய படையினர் அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். சமீபத்தில் புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொன்று புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போர் காரணமாக இரு நாடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளனர். வீரர்கள் உயிரிழப்பு குறித்து உக்ரைன் தெரிவித்த கருத்துக்களை ரஷியா ஏற்க மறுத்து வந்தது. ஆனால், இழப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
உக்ரைன் போரில் ரஷியா படைவீரர்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது எங்களுக்கு பெரிய கவலையை அளிக்கிறது எனவும் அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் கிரெம்ளின் தெரிவித்தார்.