கச்சா எண்ணெய் விலை பெரும் சுமை.. ஜிடிபி 7.2% ஆக சரியும்.. ஆர்பிஐ சக்திகாந்த தாஸ் அறிவிப்பு..!

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் 2022-23ஆம் நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் அடுத்த 2 மாதத்திற்கு ரெப்போ விகிதத்தை 4% ஆகவும், MSF மற்றும் வங்கி விகிதம் 4.25% ஆகவும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளார்.

ஆனால் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 0.40% அதிகரித்து 3.75% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதேவேளையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துக் கணிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

இந்திய பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் கச்சா எண்ணெய் விலை உயர்வு..!

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இந்திய வர்த்தகச் சந்தையைத் தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தால் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் வாயிலாக ஆர்பிஐ கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி விகிதத்தைக் கணித்துள்ளது.

ஜிடிபி வளர்ச்சி

ஜிடிபி வளர்ச்சி

2022-23ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலராக இருந்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 16.2%, 2வது காலாண்டில் 6.2%, 3வது காலாண்டில் 4.1%, 4வது காலாண்டில் 4% ஆக இருக்கும். இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ரியல் ஜிடிபி அளவை 7.8 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகக் குறைத்துள்ளது.

 ரிசர்வ் வங்கி
 

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டு உள்ள நடப்பு நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி அளவீடுகள் அனைத்தும் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 100 டாலராக இருந்தால் மட்டுமே. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் கட்டாயம் ஜிடிபி வளர்ச்சி சரியும். இதேபோல் 100 டாவருக்குக் கீழ் சரிந்தால் ஜிடிபி வளர்ச்சி அளவீடுகள் அதிகரிக்கும்.

தளர்வு கட்டாயம் தேவை

தளர்வு கட்டாயம் தேவை

இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கச்சா எண்ணெய் விலையை அதிகளவில் சார்ந்துள்ளது. இதேபோல் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் நிலையில் இந்த வட்டி விகித தளர்வு கட்டாயம் தேவை என ஆர்பிஐ உணர்ந்து ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்காமல் உள்ளது.

ரிவர்ஸ் ரெப்போ விகிதம்

ரிவர்ஸ் ரெப்போ விகிதம்

இதற்கிடையில் இந்தியாவின் 10 வருட பத்திர முதலீட்டின் லாப அளவு 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் ஆர்பிஐ ரிவர்ஸ் ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டு உள்ள நிலையில் வங்கியின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதேவேளையில் ஆர்பிஐ அறிவிப்புக்கு பின்பு டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 21 பைசா அதிகரித்து 75.82 ஆக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

FY23 real GDP growth at 7.2% estimate assumes crude oil at $100 per barrel

FY23 real GDP growth at 7.2% estimate assumes crude oil at $100 per barrel கச்சா எண்ணெய் விலை பெரும் சுமை.. ஜிடிபி 7.2% ஆகச் சரியும்.. ஆர்பிஐ சக்திகாந்த தாஸ் அறிவிப்பு..!

Story first published: Friday, April 8, 2022, 12:09 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.