1000 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்த 'ஆர்ஆர்ஆர்'.! எதிர்ப்பாளர்களுக்கு சம்மட்டி அடி.!

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’.

இந்த படம் வெளியானதுமுதல் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அதிக பட்ச ஆதரவு காரணமாகவும், படத்தின் உருவாக்கத்திலும், வணிக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வெளிவந்த முதல் நாள் சுமார் 223 கோடி ரூபாய் வசூலித்ததாக இந்த படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

மேலும், பாகுபலி திரைப்படத்தின் வசூலை ஆர் ஆர் ஆர் திரைப்படம் முறியடிக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் உலகளவில் ‌ இந்த திரைப்படம் சுமார் 1,000 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக தெரியவருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.