ஹூப்பள்ளியிலிருந்து மங்களூரு, மைசூருக்கு மே 1 முதல் விமான போக்குவரத்து துவக்கம்| Dinamalar

பெங்களூரு : ஹூப்பள்ளியிலிருந்து மங்களூரு மற்றும் மைசூருக்கு மே 1ல் விமான போக்குவரத்து துவங்கவுள்ளது.பயணியரின் வசதிக்காக, ஹூப்பள்ளியிலிருந்து மங்களூரு மற்றும் மைசூருக்கு விமான போக்குவரத்தை துவங்கும்படி, மத்திய சுரங்கம், நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ‘இண்டிகோ’ விமான நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட அந்த நிறுவனம், மே 1 முதல் விமான போக்குவரத்தை துவங்குவதாக அறிவித்து உள்ளது. மே 1 முதல், வாரத்தில் நான்கு நாட்கள் மங்களூருக்கும், மே 3 முதல் வாரத்தில் மூன்று நாட்கள் மைசூருக்கும் விமான சேவை துவங்க உள்ளது.மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:ஹூப்பள்ளி விமான நிலையத்தை, மத்திய அரசு தரமான விமான நிலையமாக மாற்றியுள்ளது.

இங்கிருந்து மைசூரு, மங்களூருக்கு விமான போக்குவரத்து சேவை அவசியம். மக்களின் பல நாட்கள் கோரிக்கை நிறைவேறியது. இதற்காக மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்துக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.