இந்த வார இறுதியில் துண்டிப்பு அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
அதன்படி, சனிக்கிழமை (09) இரண்டு மணித்தியாலங்களும், ஞாயிற்றுக்கிழமை (10) ஒரு மணித்தியாலமும் மின் துண்டிப்புஅமுல்படுத்தப்படும்.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு சனிக்கிழமை (09) பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும்.
மேலும், P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு, சனிக்கிழமை (09) பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, அன்றைய தினம் காலை 6 மணி முதல் 09.30 மணி வரை CC1 வலயத்திற்கு 3 மணித்தியாலங்கள் 30 நிமிடம் மின்சாரம் தடைப்படும்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) A, B, C, D, E, F, G, H, I, J, K, L , P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணித்தியாலம் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, அன்றைய தினம் காலை 6 மணி முதல் 09.30 மணி வரையான காலப்பகுதியில் CC1 வலயத்திற்கு 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின்சாரம் தடைப்படும்.