தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி மற்றும்
ஐஸ்வர்யா
ராஜேஷ் இருவரின் திரைப்படங்களும் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகளில் வெளியாகி வருகிறதுஇருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி உள்ளனர்.எனவே இந்த காம்போ இணையும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.இந்த நிலையில் மொக்கை கதைய கூட கேளு என விஜய் சேதுபதி கூறியதாக ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
காக்கா முட்டை
திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகையும் முயற்சிக்கு முயற்சிக்காத கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தது அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பார்.
என் படத்தை மோடி தடுத்துவிட்டார்: பரபரப்பை கிளப்பிய பிக்பாஸ் பிரபலம்..!
படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி நடிப்பதில் விஜய் சேதுபதிக்கு நிகராக நடிகைகளில் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அதில்
ரம்மி
, பண்ணையாரும் பத்மினியும்,
தர்மதுரை
,
க/பெ ரணசிங்கம்
என இவர்களது கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது இதில் க/பெ ரணசிங்கம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் மொத்த நடிப்பு திறமையும் க/பெ ரணசிங்கம் படத்தில் வெளிப்படுத்தி இருப்பார். க/பெ ரணசிங்கம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுகளையும் ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றார்.
சினிமாவிலும் சரி கதைகளை தேர்வு செய்வதிலும் சரி ஏதாவது சந்தேகம் இருந்தால் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் அணுகுவது
விஜய்சேதுபதி
தான் என்பது பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக திரைத்துறையில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படபிடிப்பு தளத்தில் அவ்வப்போது சில
டிப்ஸ்களை
விஜய் சேதுபதி வஞ்சனையில்லாமல் வழங்கி வருகிறார் அந்த வகையில் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் மொக்கைக் கதையை கூட கேட்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.மேலும் எந்த ஒரு கதையையும் அலட்சியமாக எண்ணிவிடாதே மொக்க கதைகள் கூட நமக்குத் தேவையான ஒரு முக்கியமான விஷயம் இருக்கும் எனவே எந்த ஒரு கதையையும் ஒதுக்கி விடக் கூடாது. இரண்டரை மணி நேரம் கதை கேட்பது கஷ்டம்தான்.
ஆனால் அதற்காக கதை கேட்பதை ஒதுக்கி விடாதே. ஒவ்வொரு கதையும் நமக்கு பொக்கிஷம் மாதிரி என விஜய் சேதுபதி கொடுத்த டிப்ஸை இன்றுவரை ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படியே பின்பற்றி வருகிறாராம்.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!