இதற்குதான் முதல்வரை சந்தித்தாரா விஜய்? சர்ச்சை கிளப்பும் ப்ளூ சட்டை மாறன்

Tamil Cinema Beast Fever Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிரகான விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் பீஸ்ட் . கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லே, இயக்குநர் செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து்ளளார். இதில் ஏற்கனவே பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான அரபிக்குத்து, மற்றும் ஜாலியோ ஜிம்கான என்ற 2 பாடல்கள் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பீஸ்ட் படம் வரும் 13-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இதற்காக கடந்த ஏப்ரல் 2-ந் தேதி இந்த படத்தில் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் ஒரு ஷாப்பிங் மாலை தனது கண்ட்ரோலுக்கு கொண்டு வரும் தீவிரவாத கும்பலிடம் மாட்டிக்கொள்ளம் பணைய கைதிகளில் ஒருவரான படத்தின் நாயகன் அந்த கும்பலிடம் இருந்து மக்களை எப்படி காப்பாற்றினார் என்பதே கதை என்று ஓரளவிற்கு ஊர்சிதமாகிறது.

இதன் மூலம் பீஸ்ட் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பு நிறுவனமாக ஏஜிஎஸ் கல்பாத்தி அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய், அங்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பீஸ்ட் பட வெளியீட்டிற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், இந்த சந்திப்பு பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது

இந்த சந்திப்பு குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தலைவா, மாஸ்டர், பீஸ்ட் என தனது பட ரிலீஸ் சமயத்தில் மட்டும் 100% அனுமதி, டிக்கட் உயர்வு, சிறப்புக்காட்சி அனுமதி கேட்டு தமிழக, புதுவை முதல்வரை சந்திக்கிறாரா விஜய்? இதேபோல ரிலீஸ் சமயம் அல்லாத நாட்களில் மக்கள் நலனுக்காக அடிக்கடி முதல்வர்களை சந்திப்பாரா? – தமிழக மக்கள் கேள்வி என்று பதிவிட்டுள்ளார்.

மேலும புதுச்சேரியில், பீஸ்ட் படத்தின் டிக்கெட் விலை 3 மடங்கு வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், சமீபத்தில் புதுவை முதல்வரை விஜய் சந்தித்து இதற்குத்தானா? சினிமா ரசிகர்கள் கேள்வி என்று பதிவிட்டுள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது சர்ச்சையாக அதை விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ப்ளூ சட்டை மாறன் பலமுறை அஜித் மற்றும் விஜய் படங்களை கடுமையாக விமர்சனம் செய்து ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்கொள்வார். அந்த வகையில் சமீபத்தில் கூட வலிமை படத்தை கடுமையாக விமர்சனம் செய்து பலரின் எதிர்ப்பை சந்தித்தார்.

படங்கள் வெளியான பிறகு விமர்சனம் செய்து வந்த இவர், தற்போது பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.