2.0-வில் காலடி வைக்கும் ஜெட் ஏர்வேஸ்.. செப்டம்பரில் மீண்டும் விண்ணை ஆளப்போகிறதா?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் விமான சேவையை மிஈண்டும் நடப்பு ஆண்டின் செப்டம்பர் இறுதிக்குள் தொடங்கலாம் என அதன் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் , ஜெட் ஏர்வேஸ் விமான சேவைக்கு இன்னும் சில அனுமதிகளை பெற வேண்டியுள்ளது. இம்மாத இறுதிக்குள் அனுமதி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளோம். அனுமதி பெற்ற சில மாதங்களுக்குள்ளேயே விமான சேவை தொடங்கி விடலாம்.

அதானிக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.15400 கோடி முதலீடு செய்யும் அபுதாபி நிறுவனம்..!

பெரும் கடன் பிரச்சனை

பெரும் கடன் பிரச்சனை

செப்டம்பர் இறுதிக்குள் சேவை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெருத்த கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஒரு கட்டத்தில் நிறுவனத்திற்கு பெரிய பூட்டாக போட்டது. போதிய நிதி திரட்ட முடியாத காரணத்தினால் தனது சேவையினை தொடர முடியாமல் தவித்தது. இதற்கிடையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தினை ஏலத்தில் விட எஸ்பிஐ தலைமையிலாக குழு நடவடிக்கையில் இறங்கியது.

தொடர் முயற்சிகள்

தொடர் முயற்சிகள்

இதற்கிடையில் தான் கடந்த ஆண்டு ஜலான் கல்ராக் கூட்டமைப்பானது ஜெட் ஏர்வேஸினை ஏலத்தில் எடுத்தது. இதன் பிறகு தான் தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி விண்ணப்பித்தது. இதற்கிடையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கி வந்த உள்நாட்டு சேவை மற்றும் வெளிநாட்டு சேவைகளையும் மீண்டும் தொடரவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

வேலை கிடைக்கும்
 

வேலை கிடைக்கும்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் செயல்படத் தொடங்கும் பட்சத்தில், மீண்டும் பல ஆயிரம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கடன் பிரச்சனையால் முடங்கிக் போன ஒரு நிறுவனம் மீண்டும் பல மாதங்களுக்கு பிறகு செயல்பாட்டுக்கு வரும் என்ற நிலையில், இது வரவேற்க தக்க நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

ஆகாசா எப்போது?

ஆகாசா எப்போது?

பங்கு சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவும் ஆகாசா என்ற விமான சேவை நிறுவனத்தினை தொடங்கியுள்ளார். இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமான சேவையை வழங்கவுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த விமான நிறுவனம் விரைவில் செயல்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய பங்கு விலை

தற்போதைய பங்கு விலை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வின் முடிவில் NSE-யில் 0.67% அதிகரித்து, 90.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.  இதன் 52 வார உச்ச விலை 133.10 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 65.10 ரூபாயாகும்.

இதே BSE-ல் 0.06% அதிகரித்து, 90.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 133.10 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 65.10 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

jet airways 2.0 likely to take off by end off September: sanjiv kapoor

jet airways 2.0 likely to take off by end off September: sanjiv kapoor/2.0-வில் காலடி வைக்கும் ஜெட் ஏர்வேஸ்.. செப்டம்பரில் மீண்டும் விண்ணை ஆளப்போகிறதா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.