ஏப்ரல் 30 முதல்… கனடாவுக்கு புலம்பெயரும் திட்டத்திலிருப்போருக்கு ஒரு முக்கியச் செய்தி…



கனடா அரசு 2022ஆம் ஆண்டுக்கான புதிய புலம்பெயர்தல் கட்டணங்களை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 30 முதல், அனைத்து நிரந்தர வாழிட உரிம விண்ணப்பங்களுக்கான கட்டணங்களையும் உயர்த்த கனடா முடிவு செய்துள்ளது.

இந்த கட்டண உயர்வு, பொருளாதார, குடும்ப மற்றும் மனிதநேய வகுப்பு புலம்பெயர்தல் ஆகிய அனைத்து வகை புலம்பெயர்தல் விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.

இந்த விண்ணப்பக் கட்டணங்கள் போக, நிரந்தர வாழிட உரிமைக்கான கட்டணமாக 500 கனேடிய டொலர்களும் செலுத்தவேண்டியிருக்கும்.

இந்தக் கட்டணம் கீழ்க்கண்டவர்களுக்கான விண்ணப்பங்களுக்கு கிடையாது…

  • முதன்மை விண்ணப்பதாரர் அல்லது ஸ்பான்ஸரைச் சார்ந்து வாழும் குழந்தைகளுக்கு
  • தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஸ்பான்சர் விண்ணப்பங்களுக்கு
  • ஆதரவற்ற சகோதரர், சகோதரி, சகோதரர் அல்லது சகோதரரின் பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகள் அல்லது
  • மனிதநேய அல்லது இரக்கத்தின் அடிப்படையில் விண்ணப்பிப்பதற்கான தகுதியுடையோர் மற்றும் convention refugees என்ற வகையின் கீழ் வரும் அகதிகள்.

நிரந்தர வாழிட அட்டை, நிரந்தர வாழிட பயண ஆவணங்கள் மற்றும் புலம்பெயர்தல் ஆவணப்படுத்துதல் போன்றவற்றிற்கான கட்டணங்களில் மாற்றம் இல்லை.
 

மேலதிக விவரங்களுக்கு…https://www.cicnews.com/2022/04/canada-announces-new-immigration-fees-for-2022-0424154.html#gs.w7mcm8



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.