ஜெய் நடிப்பில் உருவான குற்றம் குற்றமே படம் நேரடியாக பிரபல தொலைக்காட்சியில் வெளியிடு…!

சுசீந்திரன் இயக்கத்தில்
ஜெய்
நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வீரபாண்டியபுரம்’ திரைப்படம் தோல்வியை தழுவியது. அதனால் அடுத்த தனது மார்க்கெட் தக்க வைத்துள்ள ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் ஜெய் உள்ளார்.

தற்போது எண்ணி துணிக,
பிரேக்கிங் நியூஸ்
உள்ளிட்ட படங்களும், பெயரிடப்படாத புதிய படங்களிலும் ஜெய் நடித்து வருகிறார்.இதற்கிடையே ‘வீரபாண்டியபுரம்’ படத்திற்கு பிறகு சுசீந்திரனுடன் மீண்டும் கூட்டணி அமைத்த ஜெய், ‘
குற்றம் குற்றமே
’ படத்தில் நடித்துள்ளார்.

என் படத்தை மோடி தடுத்துவிட்டார்: பரபரப்பை கிளப்பிய பிக்பாஸ் பிரபலம்..!

இந்த படத்தில்
திவ்யா துரைசாமி
கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா,
ஸ்மிருதி வெங்கட்
, ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படம் நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.