வேற்றுமையில் ஒற்றுமையை தமிழ்நாட்டில் கற்றுக்கொள்ளுங்கள்! – வாசகர்களின் கமெண்ட்ஸ்

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரல் 9-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘வேற்றுமையில் ஒற்றுமையை தமிழ்நாட்டில் கற்றுக்கொள்ளுங்கள்!’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

Meenu Kumari 
இனிமேல் அனைவரும் இட்லி க்கு மாற்றாக சப்பாத்தியை தான் சாப்பிட வேண்டும். எல்லோருக்கும் ஒரே சாப்பாடு. உடையிலும் இனி ஆண், பெண், எல்லோரும் பைஜாமா தான் அணிய வேண்டும்

Vijaya Kumar V S

இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இல்லை அதேபோன்று மொழியை திணிக்க வேண்டாம் அவர்களுக்கு தேவை என்றால் அந்த மொழியை கற்றுக் கொள்வார்கள்

muthuramalingam

முதலில் உங்க பேருக்கு பின்னால் இருக்கும் ஜாதி பேரை எடுங்கள். தமிழ்நாட்டில் ஜாதிப்பேரை போட்டுக் கொள்ளவது இல்லை.
image
வேற்றுமையில் ஒற்றுமையை தமிழ்நாட்டில் கற்றுக்கொள்ளுங்கள்.
புதிய தலைமுறை
ஆங்கிலம் பயின்ற தமிழர்கள். அயல்நாடுகளில் புகழப்படுகிறார்கள். இந்தி படித்த வடநாட்டவர்கள். தமிழ் நாட்டில் தமிழ் பயின்று வருகின்றனர். இதனை வடநாட்டு அரசியல்வாதிகளுக்கு புரிய வைப்பது யாரோ?
புதிய தலைமுறை
மூன்றாவது மொழியாக ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் ஆங்கிலத்திற்கு பதிலாக என்பது ஏற்க முடியாது.
புதிய தலைமுறை
முதலில் விருப்ப மொழி என்றார்கள், இப்போது கட்டாயப்படுத்த முயற்சிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.