டாணாக்காரன்: "போலீஸ் யூனிபார்ம் போட்டு நடிப்பேன்னு நினைச்சுக்கூட பாக்கல" – கார்த்திக் கண்ணன்

இயக்குநர் தமிழ் எடுத்திருக்கும் திரைப்படம் ‘டாணாக்கரன்’ ஓடிடியில் வெளியாகிருக்கும் பலரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது. விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமான முருகன் கேரக்டரில் கார்த்திக் கண்ணன் நடித்திருக்கிறார். படத்தில் நடித்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“படத்தோட ஷூட்டிங் வேலூர்ல நடந்தது. அதிகமான வெயில் இருந்த நேரத்துலதான் அங்கே இருந்தோம். காலையில இருந்து வெயில்ல ஓடிக்கிட்டே இருப்போம். நாங்கபட்ட எல்லா கஷ்டத்துக்கும் பலன் கிடைச்சிருக்கு. ஐ.டில வொர்க் பண்ணிட்டு இருந்தேன். அப்போ, வீக் எண்ட்ல ப்ரெண்ட்ஸ்கூட கிரிக்கெட் விளையாடப்போவேன். அங்கே படத்தோட உதவி இயக்குநர் என்னைப் பார்த்துட்டு நடிக்கக் கூப்பிட்டார். எனக்கும் ஆர்வம் இருந்தனால உடனே ஓகே சொல்லிட்டேன். இதுக்கு முன்னாடி சில ஷார்ட் பிலிம்ஸ் நடிச்சிருக்கேன். படத்துல நடிக்க போறோம்னு ஐ.டி வேலையை விட்டுட்டேன். அப்புறம் இயக்குநர் தமிழ் கூட அறிமுகம் ஏற்பட்டது. ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்.

விக்ரம் பிரபு

ஐ.டி வேலையை விட்டுட்டு ஷூட்டிங் போறப்போ கொரோனா வந்திருச்சு. இதனால, ரெண்டு வருஷம் லாக்டவுன்ல கடக்க வேண்டியதா இருந்தது. கையில வருமானம் இல்ல. எனக்கு குழந்தை பொறந்திருந்தது. எப்போவும் நம்பிக்கையை விடாம தன்னம்பிக்கையோட இருந்தேன். படம் ரிலீஸூக்குப் பிறகு எல்லாமே மாறுனு நம்புனேன். எல்லாம் மாறியிருக்கு. என்னோட வீட்டுல அப்பா, அம்மா, மனைவினு எல்லாரும் என்னை நம்புனாங்க. இவங்களுக்கு பெரிய நன்றி சொல்லணும். படம் ரிலீஸான உடனே நைட் படத்தைப் பார்த்துட்டு பலரும் போன் பண்ணி வாழ்த்து சொன்னாங்க. ப்ரெண்ட்ஸ் எல்லாரும் ‘மச்சா, நல்லா பண்ணிருக்கடானு’ சொன்னாங்க. என்னுடைய முகம் பார்த்துட்டு இன்னோசென்ட்னு சொல்லுவாங்க. அதை உடைக்குற மாதிரி நெகட்டிவ் கேரக்டர் பண்ண ஆசைப்படுறேன். இந்தப் படம் பார்த்துட்டு நிறைய வாய்ப்புகள் வரும்னு நம்புறேன்.” என்றவர் மேலும்,

“படத்தோட ஹீரோ விக்ரம் பிரபு சார் ரொம்ப க்ளோஸா ப்ரெண்ட் மாதிரியே பழகுனார். நடிக்குறதுக்கு நிறைய ஸ்கோப் கொடுத்தார். எந்த டவுட் கேட்டாலும் சொல்லுவார். எந்த தயக்கமும் இவர்கிட்ட பழகுனப்போ இல்ல. படம் பார்த்துட்டு என்னுடைய நடிப்பு நல்லாயிருக்குனு பிரபு சார் சொன்னதா போன் பண்ணி சொன்னார். அது ரொம்ப சந்தோஷமா இருந்தது. வாழ்க்கையில போலீஸ் யூனிபார்ம் போட்டு நடிப்பேன்னு நினைச்சுக்கூட பார்த்தது இல்ல. விக்ரம் பிரபு சாருக்கும் கிரிக்கெட் பிடிக்கும். இதனால, கிரிக்கெட் பற்றி நிறைய பேசிக்கிட்டு இருப்பார். பாடி சேமிங்குற விஷயம் படத்துல பெருசா இருக்காது. என் வாழ்க்கையில் கடந்து வந்த பாடி சேமிங் எல்லாத்தையும் பார்த்தப்போ முருகன் கேரக்டர் தன்னம்பிக்கையான கேரக்டராகத் தெரிஞ்சது. இந்தப் படம் எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கு.” எனத் தன்னம்பிக்கையுடன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.