சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி!

மும்பை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 154 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதன் மூலம்  சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.