பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா நாப்கின்; சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கை ஹைலைட்ஸ்

Chennai Corporation Budget highlights : 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளின் ஹைலைட்ஸ் இங்கே. 6 ஆண்டுகளாக தனி அதிகாரி பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், இந்த ஆண்டு மேயர் ப்ரியா நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதிமுக வெளிநடப்பு

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாநகராட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சொத்து வரி உயர்வு குறித்து பேச மேயர் ப்ரியா அனுமதி வழங்காத காரணத்தால் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர் என்று கூறப்படுகிறது.

Chennai Corporation Budget highlights

வரும் காலங்களில் பொதுமக்களுக்கான சேவைகள் காலதாமதமின்றி விரைவாக செய்து முடிக்க சென்னை மாநகராட்சியில் e-office அறிமுகப்படுத்தப்படும் என் அறிவிப்பு

மணலி ஏரி, சாத்தாங்காடு குளம், சடையன் குப்பன் குளம், மாதவரம் பெரிய ஏரி, அண்ணா நெடுஞ்சாலை குளம் உட்பட சென்னையில் குளங்களை மேம்படுத்தும் பணி, ரூ.143 கோடி மதிப்பீட்டில், இந்திய அரசின் அம்ருட் 2.0 திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ள நடவடிக்கை.

கடந்த நிதி ஆண்டில் 16,500 எண்ணிக்கையிலான நெகிழி குப்பை தொட்டிகள் ரூபாய் 2.90 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

இந்த நிதியாண்டில் ஒவ்வொரு மாதமும் 100 மெட்ரிக் டன் அளவில் மொத்தம் 1200 மெட்ரிக் டன் உரம் தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படும்.

2.40 கோடி செலவில் 3 வீடற்றவர்களுக்கான காப்பகம் உருவாக்கப்படும்.

கவுன்சிலருக்கு வார்டு மேம்பாட்டு நிதி 30 லட்சத்தில் இருந்து 35 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 200 வார்டுகளுக்கு ரூ. 70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

பள்ளிகளுக்கான அறிவிப்பு

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ. 5.47 கோடி மதிப்பில் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகளை வழங்க ரூ. 6.91 கோடி ஒதுக்கீடு.

மாணவர்கள் பாராளுமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்ள, பேச்சாற்றலை வளர்க்க மாதிரி ஐக்கிய நாடு குழு, நாடாளுமன்ற குழு அமைக்கப்படும்.

நிர்பயா நிதியின் கீழ், ரூ. 23.66 மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா நாப்கின் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னார்வலர்கள் உதவியுடன் அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வர இருக்கும் கல்வி ஆண்டில் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ. 1.86 கோடியில் இணைய வசதி வழங்கப்படும்.

மீனம்பாக்கம் மற்றும் சோழிங்க நல்லூரில் 80 லட்சம் செலவில் நாய் இனபெருக்க கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்படும்

வரவேற்பு

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி கூறி தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே. இளமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.