வெப் தொடரில் நிறைய விஷயங்களை பேசலாம் – வெற்றிமாறன்

ஜீ5 ஓடிடி தளம் 10 புதிய வெப் சீரிஸ்களை வெளியிட இருக்கிறது. பிரகாஷ்ராஜ் நடிப்பில். வி.பிரியா இயக்கத்தில் 'அனந்தம்', வசந்தபாலனின் இயக்கத்தில் 'தலைமைச் செயலகம்', ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் 'பைவ், சிக்ஸ், செவன், எயிட்', கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் 'பேப்பர் ராக்கெட்', அமீர் நடிப்பில் வெற்றிமாறன் எழுதி, ரமேஷ் இயக்கியுள்ள 'நிலமெல்லாம் ரத்தம்' உள்பட 10 தொடர்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

இந்த 10 தொடர்களில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது வெற்றிமாறன் கதையில் அமீர் நடிக்கும் நிலமெல்லாம் ரத்தம். இதனை ரமேஷ் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இதுகுறித்து வெற்றி மாறன் கூறியிருப்பதாவது: வெப் சீரிஸ் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நினைத்தை நிறைய எழுதுவதற்க்கான வாய்ப்பு கிடைக்கும். சினிமாவுக்கு 200 பக்கத்துக்கு மேல் எழுத முடியாது. ஆனால் வெப் சீரிசில் அதையும் தாண்டி எழுதிக்கொண்டே போகலாம். சினிமாவில் இருக்கும் கட்டுப்பாட்டை கடந்து வெப் தொடரில் நிறைய விஷயங்களை பேசலாம் என்கிறார் வெற்றி மாறன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.