இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது.
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதால் பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி நாடாளுமன்றம் உத்தரவிட்டுள்ளது.