திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள கொச்சி பகுதிக்கு ஊட்டியில் இருந்து பிளஸ்-2 மாணவிகள் சிலர் சுற்றுலா சென்றனர்.
கொச்சியை சுற்றி பார்த்த பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள மாலுக்கு சென்றனர். அங்கு ஒரு திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
இதனால் மாலில் ஏராளமானோர் கூடி இருந்தனர். சுற்றுலா சென்ற மாணவிகளும் அதனை வேடிக்கை பார்த்தனர். அப்போது கூட்டத்தில் நின்ற பிளஸ் – 2 மாணவிக்கு வாலிபர் ஒருவர் செக்ஸ் தொல்லை கொடுத்தார்.
இதை கண்டு அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். அவர் அந்த இடத்தில் இருந்து விலகி செல்ல முயன்ற போது அந்த வாலிபர் மீண்டும் மாணவியின் அருகில் சென்று அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
உடனே அந்த மாணவி அலறியபடி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் விரைந்து வந்ததும், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை மாலில் இருந்தவர்கள் விரட்டி பிடித்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதியானது. அவர் அந்த பகுதியில் பேட்டரி கடை நடத்தி வந்த தனேஷ் தனபாலன் (வயது 44) என தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.