சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர்கள் பெற்றோருடன் ஆர்ப்பாட்டம்

சென்னை:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது இயங்கி வருகிறது. அங்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவம் 2, 3, 4-ம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்களது பெற்றோருடன் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அரசு நிர்ணயித்துள்ள ரூ.613.500 கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் ரூ.3 லட்சம் முதல் 5 லட்சம் வரை வசூலிப்பதாக கூறி அதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுவாக அரசு விடுமுறை நாட்களில் ஆர்ப்பாட்டம் யாரும் நடத்துவது இல்லை. ஆனால் இவர்கள் போலீசில் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கை மனு வினை போலீசார் பெற்றுக் கொண்டனர். கட்டண உயர்வை குறைக்கக்கோரி கோ‌ஷங்களும் எழுப்பினார்கள்.

இதையும் படியுங்கள்… 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.