பொருளாதார நெருக்கடி – இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தமிழகம் வருகை

ராமேஸ்வரம்:
லங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைகள் உட்பட மேலும் 19 பேர் இலங்கையிலிருந்து தமிழகம் வந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்த 19 நபர்களிடம், கியு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இலங்கையில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளனர். ஏற்கனவே இலங்கையிலிருந்து வந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20பேர், மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள நிலையில், தற்போது மேலும் 19 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு, அரிசி, பருப்பு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இந்தப் பொருட்களை விநியோகிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.