சீனாவின் ஷாங்காய் நகரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அங்கு தீவிர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஷாங்காய் நகரில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஊரடங்கின் காரணமாக நகரில் உள்ள இரண்டரை கோடி மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
ஷாங்காய் மக்களுக்குத் தேவையான பொருட்கள் உரிய நேரத்தில் அளிக்கப்படாததால் ஏராளமானோர் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் உணவு மற்றும் மருத்துவ வசதியின்மை குறித்து புகார் கூறுவதாக ஷாங்காய் நகர மக்கள் ஜன்னல், பால்கனிகளின் வழியே கூச்சலிடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
மேலும் படிக்க | சீனாவில் தொடர்ந்து கொரோனா…ஷாங்காயில் தீவிர ஊரடங்கு
What the?? This video taken yesterday in Shanghai, China, by the father of a close friend of mine. She verified its authenticity: People screaming out of their windows after a week of total lockdown, no leaving your apartment for any reason. pic.twitter.com/iHGOO8D8Cz
— Patrick Madrid (@patrickmadrid) April 9, 2022
ஷாங்காய் நகரின் சில பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாட்டையும் சூப்பர் மார்க்கெட் ஒன்றை மக்கள் சூறையாட முயற்சித்ததால் கலவரம் வெடித்தது. உணவு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த சீன அரசு ஜீரோ கோவிட் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. இதன்படி நகரில் உள்ள இரண்டரை கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
BREAKING—China’s grip on BA2. At least 23 cities in China on full or partial lockdown—cities with over 193 million residents. Food shortages throughout even Shanghai. Doctors and nurses also exhausted—this doctor collapsed, and was carried off by patients at an isolation center. pic.twitter.com/raJlRNEezC
— Eric Feigl-Ding (@DrEricDing) April 9, 2022
மேலும் படிக்க | சீனாவின் மீண்டும் தலை தூக்கும் கொரோனா; ஷாங்காய் நகரில் தீவிர லாக்டவுன் அமல்..!!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR