கடும் கொரோனா கட்டுப்பாடு: பசி கொடுமை – பால்கனி வழியாக உதவியை எதிர்நோக்கும் சீனர்கள்

பீஜிங்,
சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அங்கு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது. 
அதிலும், சுமார் 26 மில்லியன் மக்கள் வசிக்கும் ஷங்காய் என்ற பகுதியில் கொரோனா பரவல் அதிகமிருப்பதால், அங்கு மிகக்கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அப்பகுதியில் சாப்பாடு, தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட சில அடிப்படை தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது.

வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவ உதவிக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் சமூக ஊடகங்கள் வழியாக தெரிவித்து வருகின்றனர். அப்படியான ஒரு வீடியோவில், `வீட்டை விட்டு தானே வெளியேவரக்கூடாது… பால்கனியிலிருந்து உதவி கேட்கிறோம். இப்போதாவது செய்யுங்கள்’ எனக்கூறி குடியிருப்புவாசிகள் சிலர் கூக்குறலிடுவது தெரியவந்துள்ளது.
ஆனால் மக்களின் இந்த குரலை கேட்ட சீன அரசாங்கமோ, ட்ரோன் வழியாக `தயவுசெய்து ஜன்னல் கதவுகளை திறந்து இப்படி பாட்டு பாட வேண்டாமென அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இதுவேகூட கொரோனா பரவலை அதிகப்படுத்தலாம்’ என கேட்டுக்கொண்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.