உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 62 லட்சத்தைத் தாண்டியது

ஜெனீவா:
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
 
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50 கோடியை நெருங்குகிறது. 
கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 44.81 கோடியைக் கடந்துள்ளது.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 4.45 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.