தலைவர் அவதாரம் எடுக்க போவது எப்போது.?: நெல்சனின் கேள்விக்கு விஜய்யின் 'நச்' பதில்..!

சன் பிக்சர்ஸ்
தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில்
விஜய்
நடித்துள்ள படம்
பீஸ்ட்
. இந்தப் படம் வரும் 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. வழக்கமாக விஜய் படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் விஜய் பேசும் அரசியல் விவகாரங்கள் சம்பந்தமான பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியது.

ஆனால் இந்தமுறை ‘பீஸ்ட்’ படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா இல்லாததால் விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதன் காரணமாக விஜய் சன் டிவியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார்.

ஜார்ஜியாவில் சர்ச்சுக்கு போன விஜய்: நெல்சன் கேட்ட டவுட்..!

இந்த நிகழ்ச்சியில் நெல்சன் நெறியாளராக இருந்து பல கேள்விகளை கேட்டார். விஜய் அதற்கு கலகலப்பாக பதிலளித்தார். அப்போது இளைய தளபதியில் இருந்து இப்போ தளபதியா உயர்ந்து இருக்கீங்க. இந்த உயரம் போதுமா? இல்லை இதுக்கும் மேல தளபதியில் இருந்து தலைவராகனும்னு எதுவும் திட்டம் இருக்கா? என நெல்சன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த விஜய், என்னை தளபதியாக்கியது ரசிகர்கள்தான். நான் தளபதியாக இருக்க வேண்டுமா அல்லது தலைவனாக மாற வேண்டுமா என்பதை ரசிகர்களும், காலமும்தான் முடிவு செய்யவேண்டும் என பதிலளித்துள்ளார் விஜய். அவரின் இந்த பேட்டியில் விஜய் அளித்த பதில்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

இப்போ தலைவர் vs தளபதியா – மாஸ் காட்டும் விஜய்யின் beast

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.