பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையே இன்று பேச்சு வார்த்தை

இந்தியா-அமெரிக்கா இடையேயான 2 + 2 பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

உக்ரைன் நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் சலௌகை விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான இந்தியாவின் முடிவு ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த மெய்நிகர் சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், இரு நாட்டு அரசுகள், பொருளாதாரங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை காணொலி காட்சி வழியாக சந்திக்கிறார் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு போர்க் குற்றவாளி: ஜோ பைடன்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இடையிலான பேச்சு வார்த்தையின் போது உக்ரைன் நெருக்கடி, இந்தோ-பசிபிக் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மோடி- பைடன் சந்திப்பை அறிவித்த வெளியுறவு அமைச்சகம் (MEA) “இருதரப்பு விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரு தரப்பினரும் தங்கள் வழக்கமான ஒத்துழைப்புடன் மற்றும் உயர் மட்ட அளவிலான ஒத்துழைப்பும் தொடர இந்த சந்திப்பு உதவும்” என்று கூறியது. முன்னதாக, அமெரிக்க அதிபர் பைடன் கடந்த மார்ச் மாதம் ஒரு மெய்நிகர் சந்திப்பின் போது மோடி மற்றும் பிற குவாட் தலைவர்களுடன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டனில் இந்தியா- அமெரிக்கா இடையிலான நான்காவது ‘2+2’ பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இரு தலைவர்களும் சந்திக்கின்றனர். அதே நாளில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தலைமையில் அமெரிக்கா சென்றுள்ள இந்திய தரப்பிலான அமெரிக்க தூதுக்குழுவின், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடம் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

மேலும் படிக்க | அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.