பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று பேச்சுவார்த்தை!

இந்தியா-அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இடையேயான அமைச்சர்கள் மட்ட 2+2 பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. நான்காவது இந்தியா-அமெரிக்கா 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ஏப்ரல் 10 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளனர். இருவரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்

இதனிடையே, இந்தியா-அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
பிரதமர் மோடி
ஆகிய இருவரும் இன்று காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். நமது அரசாங்கங்கள், பொருளாதாரங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்காக, அதிபர்
ஜோ பைடன்
இந்திய பிரதமர் மோடியை காணொலி காட்சி வழியாக சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, கொரோனா தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பது, காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வது, உலகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் செழுமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்பது குறித்து இருதலைவர்களும் விவாதிப்பார்கள் என தெரிகிறது.

மேலும், இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக உக்ரைன் – ரஷ்யா போர் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், உக்ரைன் அதிபர் ஆகியோருடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். போரில் இந்தியா நடுநிலை வகிக்கும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் மிருகத்தனமான போரின் விளைவுகள் மற்றும் உலகளாவிய உணவு வழங்கல் மற்றும் பொருட்களின் சந்தைகளில் அதன் சீர்குலைக்கும் தாக்கத்தை தணிப்பது பற்றிய அமெரிக்காவின் ஆலோசனைகளை ஜோ பைடன் வழங்குவார் என்று வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.