டுவிட்டர் குழு: இணைய விரும்பாத தொழிலதிபர்.. உக்ரைனில் திடீர் விசிட் செய்த தலைவர்.. மேலும் செய்திகள்

டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இணைய விரும்பவில்லை என்று தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் மாபெரும் செல்வந்தர்களில் ஒருவரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், முன்னணி சமூக வலைதள நிறுவனமான “டுவிட்டர்” நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கினார்.

டுவிட்டரின் 9.2% பங்குகளை வாங்கி அந்நிறுவனத்தின் அதிகமான பங்குகளுக்கு உரிமையாளராக, உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார்.

இதனையடுத்து சமீபத்தில் தான், அவர் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக நியமிக்கப்படுவார் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

கொரோனா பாதிப்பு: 49.91 கோடியாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,91,32,359 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 44,84,52,890 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,44,76,147 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 62,03,322 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைட் கிளப்பில் துப்பாக்கிச் சூடு-2 பேர் பலி

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள நைட் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டம் கண்ட ராஜபக்சே சகோதரர்களின் கோட்டை

போர் நடக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பிரதமர்

போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் சென்றார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் ஜென்ஸ்கியுடன் நகர வீதியில் சென்று போர் பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
இது திட்டமிடப்படாத திடீர் பயணம் ஆகும்.

போர் நடந்த இடங்களை பார்வையிட்ட பிறகு, உக்ரைனுக்கு கூடுதலாக விமான எதிர்ப்பு ஏவுகணைகள், துல்லியத் தாக்குதல்கள் நடத்துவதற்கான உயர் தொழில்நுட்ப வெடி மருந்துகள் ஆகியவற்றை வழங்கவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.