‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் குடிநீர் இணைப்பு பெற்றவர்களிடம், 10 சதவீதம் பொதுமக்களின் பங்களிப்பு நிதி 12.29 கோடி ரூபாயை பெற முடியாமல், ஊரக வளர்ச்சி துறையினர் திணறி வருகின்றனர். முறையான வழிகாட்டல் இல்லாததே காரணம் என, அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஒன்றியங்களில், 274 ஊராட்சிகளில், 1,354 குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
இதில், 1.16 லட்சம் பேருக்கு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.குடிநீர் இணைப்பு பெறும் பயனாளிகள், திட்ட தொகையில் 10 சதவீதத்தை, பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.அரசு வழிகாட்டலில், ஆதிதிராவிடர் வகுப்பினர் 750 ரூபாய்; பொது பிரிவினர் 1,500 ரூபாய்; பழங்குடியினர் இலவசமாக குடிநீர் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும்,12.82 கோடி ரூபாய், பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.
கடந்த, 4ம் தேதி வரை, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 53.76 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள தொகை, 12.29 கோடி ரூபாய் வசூலிக்கப்படவில்லை.புதிதாக பதவி ஏற்றிருக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் சேர்ந்து, ஊரக வளர்ச்சி துறையினர், நிலுவை தொகையை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால், ஊரக வளர்ச்சி துறைக்கு, வருவாய் பெருக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர் கூறியதாவது:
அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் குடிநீர் இணைப்பு முறைப்படுத்துவதற்கு, ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.இத்திட்டத்தை, அவசரத்தில் துவக்கிவிட்டோம். ஒவ்வொரு குடிநீர் இணைப்பிற்கும், 10 சதவீதம் பொதுமக்கள் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும் என, அரசு வழிகாட்டலில் உள்ளது.புதிதாக போடப்பட்ட குடிநீர் இணைப்பிற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என, புதிதாக வந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், முட்டுக்கட்டை போடுகின்றனர். இதனால், பணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.எவ்வளவு பாக்கி வட்டாரம் மக்களின் பங்களிப்பு தொகை 4ம் தேதி வரை செலுத்தியது நிலுவைகாஞ்சிபுரம் 52,77,700 7,11,850 45,65,850குன்றத்துார் 7,02,94,200 1,99,06050 6,82,98,150ஸ்ரீபெரும்புதுார் 3,11,66,500 1,44,06858 2,97,56,142உத்திரமேரூர் 1,23,22,500 8,38,750 1,14,83,750வாலாஜாபாத் 92,20,200 3,82,750 88,37,450மொத்தம் 12,82,81,100 53,76,258 12,29,04,842வரியினங்கள் வசூலிக்க வேண்டும் ஊராட்சிகளை பொறுத்தவரை குடிநீர், வீட்டு வரி, நுாலக வரி, தொழில் வரி உள்ளிட்ட பல வரியினங்கள் வாயிலாக, ஊராட்சிகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். சிலர், அரசியலில் ஆதாயம் தேடுவதற்கு, வரிகளை வசூலிக்க வேண்டாம் என கூறுவதுண்டு. இது, ஊராட்சி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களிடம் ஊக்குவிக்க வேண்டாம். பாரபட்சம் இன்றி, அனைவரிடத்திலும் வரி இனங்களை வசூலிக்க வேண்டும். சம்பந்தப்பட்டத் துறையினர் முறைப்படுத்த வேண்டும்.
– நமது நிருபர் –