பிரான்சில் சில பணிகளுக்கு விண்ணப்பிப்போருக்கு பிரெஞ்சு மொழி சரளமாகப் பேசத் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா
பிரான்சில் பணி தேடும் உங்களுக்கு பிரெஞ்சு மொழி பேசத்தெரியாது என்றாலும், அதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை. காரணம், நீங்கள் மெல்ல மெல்ல பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்ளும் நேரத்திலேயே, நீங்கள் விண்ணப்பிப்பதற்கு ஏராளமான பணிகள் பிரான்சில் உள்ளன.
அவை என்னவெல்லாம் என பார்க்கலாமா?
1. குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் வேலை (Nanny/au pair)
பிரான்சுக்கு வரும் இளம் வயதினர் பலர் பிரெஞ்சு மொழி கற்றுக்கொண்டே வருவாயும் பார்க்க உதவும் ஒரு பணி குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பணியாகும்.
2. Freelance Writing/Editing
வீட்டிலிருந்தபடியே பிரான்சில் பணி செய்ய விரும்புகிறீர்களா? அதற்கேற்ற பணி Freelance Writing/Editing ஆகும்.
3. Remote working
சமீப காலமாக இந்த சில குறிப்பிட்ட பணிகளுக்கு Remote working பிரபலமாகிவருகிறது. உங்கள் நாட்டில் நீங்கள் செய்யும் பணியை பிரான்சிலிருந்தவாறு ஒன்லைன் மூலம் செய்ய முடியும்.
4. Bartender
பிரெஞ்சு மொழி தெரியாதவர்களுக்கு மிகவும் பிரபலமான பணி இந்த Bartender பணி என கருதப்படுகிறது. உங்கள் வாடிக்கையாளர்களிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தே கொஞ்சம் கொஞ்சமாக பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்ளவும் இந்த பணியில் வாய்ப்புள்ளது.
அதேபோல, ஆங்கில அல்லது ஐரிஷ் பார்கள் பிரான்சின் சில குறிப்பிட்ட பகுதிகளில் அமைந்துள்ளன. அங்கு பிரான்ஸ் நாட்டு இளைஞர்கள் அதிகம் செல்வார்களாம். அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள அந்த பார்கள் அவர்களுக்கு உதவுகின்றனவாம்.
5. English teacher
இந்தப் பணியைப் பொருத்தவரை, நீங்கள் ஒரு பல்கலை அல்லது மொழிப்பள்ளியிலோ, அல்லது தனி நபருக்கோ, நேரடியாகவோ அல்லது ஒன்லைனிலோ ஆங்கிலம் கற்றுக்கொடுக்கலாம்.
6. Tour guide
பிரெஞ்சு மொழி பேசாத சுற்றுல்லாப்பயணிகள் நிச்சயம் ஆங்கிலம் பேசும் ஒரு வழிகாட்டியை எதிர்பார்ப்பார்கள் என்பதால், இந்தப் பணி உங்களுக்குப் பயனுள்ளதாக அமையலாம்.
நடைமுறை பிரச்சினைகள்
நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றின் பாஸ்போர்ட் உடையவரானால், நீங்கள் பிரான்ஸ் செல்வதற்கோ. அங்கு பணி செய்வதற்கோ பிரச்சினை இருக்காது.
ஆனால், நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாட்டவராக இல்லையென்றால், நீங்கள் 90 நாட்களுக்கு அதிகமாக பிரான்சில் தங்கத் திட்டமிட்டால், உங்களுக்கு விசா தேவைப்படும்.
பிரான்ஸ் விசா பெறுவதற்கும் கட்டாயம் பிரெஞ்சு மொழி தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.