இந்தியாவில் கிரிப்டோகரன்சி மீதான 30 சதவீத கேப்பிடல் கெயின் வரி, பணப் பரிமாற்றத்தில் 1 சதவீத TDS வரி விதிப்பு ஆகியவற்றின் மூலம் சில்லறை முதலீட்டாளர்கள் எண்ணிக்கையின் வளர்ச்சி கணிசமாகக் குறையத் துவங்கி வருகிறது.
தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..!
இந்த நிலையில், மத்திய அரசு நீண்ட காலமாக ஆய்வு செய்து வரும் கிரிப்டோகரன்சி மசோதா விரைவில் தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது.
காயின்பேஸ், மொபிகிவிக்
இதற்கிடையில் இந்தியாவில் காயின்பேஸ் தளத்திற்கு UPI பேமெண்ட் சேவை ரத்து உள்ளது, இதேபோல் கிரிப்டோ வர்த்தகத்திற்கு நிதி பரிமாற்ற சேவையை அளிக்கும் மொபிகிவிக் கிரிப்டோ தளத்திற்கான சேவையை முடக்கியுள்ளது.
இதேவேளையில் முன்னணி கிரிப்டோகரன்சி விலை சரிந்துள்ளது இது ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட்டி விகிதம்
உலக நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல முன்னணி நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா மந்த நிலைக்குத் தள்ளப்படுவதாகப் பேங்க் ஆப் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் சரிவுடன் இருக்கிறது.
மெட்டா மற்றும் ஸ்டார்பக்ஸ்
இதன் வாயிலாகத் திங்கட்கிழமை வர்த்தகம் துவக்கத்தில் இருந்தே பிட்காயின் எதிரியம் ஆகியவை சரிவுடன் துவங்கி ஒட்டுமொத்த சர்வதேச கிரிப்டோகரன்சி முதலீட்டு சந்தையும் சரிவடைந்துள்ளது. மெட்டா மற்றும் ஸ்டார்பக்ஸ் NFT துறையில் இறங்குவது குறித்த வெளியான அறிவிப்பு கிரிப்டோ சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பிட்காயின் எதிரியம்
இன்றைய வர்த்தகத்தில் அதிகச் சந்தை மதிப்புகொண்ட டாப் 50 கிரிப்டோகரன்சியும் சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதில் குறிப்பாகப் பிட்காயின் 2.23 சதவீதம் சரிந்து 41,537.70 டாலருக்கும், எதிரியம் 4.89 சதவீதம் சரிந்து 3,081.26 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
டெரா சரிவு
இதேபோல் பினான்ஸ், சோலானா, ரிப்பிள், கார்டானோ ஆகியவை 3 முதல் 6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. மேலும் டெரா 8.14 சதவீதமும், அவலான்சி 7.23 சதவீதமும், போல்காடாட் 7.79 சதவீதமும் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை வாரத்தின் முதல் நாளே கொடுத்துள்ளது.
மீம்காயின்
பிட்காயின், ஆல்ட்காயின்-ஐ தொடர்ந்து தற்போது முதலீட்டாளர்கள் மீம்காயின்-களுக்கு எனத் தனிப்பட்ட டிராக்கிங் வைத்து கண்காணிக்கும் அளவிற்கு மீம்காயின் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மீம்காயின்களில் மிக முக்கியமான டோஜ்காயின் 3.97 சதவீதமும், ஷிபா இனு 3.89 சதவீதமும் சரிந்துள்ளது.
Bitcoin to Shiba inu falls upto 8 percent today, Cryptocurrency Bill to Come Soon
Bitcoin to Shiba inu falls upto 8 percent today, Cryptocurrency Bill to Come Soon முதலீட்டை காலி செய்த கிரிப்டோகரன்சி.. பிட்காயின் முதல் ஷிபா இனு வரை கடும் சரிவு..!