வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமி கூட்டு பலாத்காரம்: 6 பேர் கும்பல் சிக்கியது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே வேலை வாங்கித் தருவதாக கூறி 17 வயது சிறுமியை 15 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய 6 பேர் கும்பலிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அந்த சிறுமியிடம் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக, அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கூறி உள்ளார். அதை நம்பி அவருடன் சிறுமி சென்று உள்ளார். ஆனால் சிறுமியை ஒரு விபச்சார கும்பலிடம் கொண்டுபோய் விட்டு உள்ளார். பின்னர் சிறுமியை 15 பேர் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்து உள்ளனர். இதில் கர்ப்பிணியான சிறுமி, வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் ஒரு மருத்துவமனைக்கு சென்று உள்ளார். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தொடுபுழா காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் கூட்டு பலாத்காரம் குறித்த தகவல் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.