ரஷ்யா- உக்ரைன் போர்! பரபரப்பை கிளப்பிய பெண் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்…


ரஷ்ய தொலைக்காட்சியில் திடீரென தோன்றி உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண்ணை நினைவிருக்கலாம்…

கடந்த மாதம், ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில், நேரலையில் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது, திடீரென, ’போரை நிறுத்துங்கள், ரஷ்ய அரசு கூறுவதை நம்பாதீர்கள், அவர்கள் பொய் சொல்கிறார்கள்’ என்று எழுதப்பட்ட பதாகையுடன் செய்தி வாசிப்பவரின் பின்னால் தோன்றினார் ஒரு பெண்.

அவரது பெயர் Marina Ovsyannikova (43). அவர் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றின் எடிட்டர் ஆவார். நேரலையில் போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, Marina மாஸ்கோவில் 14 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, பின்னர் அவருக்கு 30,000 ரூபிள்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்துக் கேள்விப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்ஸ் Marinaவுக்கு உதவ விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால், மேக்ரானின் உதவியை நிராகரித்துவிட்ட Marina, தனக்கு ரஷ்யாவை விட்டு வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார்.

இந்நிலையில், ஜேர்மன் ஊடகம் ஒன்று Marinaவை பணிக்கமர்த்தியுள்ளது. ஜேர்மன் செய்தித்தாளான Die Weltக்காக ப்ரீலான்சராக பணி செய்யும் Marina, அதன் தொலைக்காட்சிக்கும் பங்களிப்பைச் செய்ய இருப்பதாக அந்த செய்தித்தாள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அவர், உக்ரைன், ரஷ்யா முதலான நாடுகளிலிருந்து செய்திகளை வழங்க இருக்கிறார்.

ஒரு ஊடகவியலாளராக இது எனக்கு அளிக்கப்பட்டுள்ள இலக்கு என கருதுகிறேன் என்று கூறியுள்ள Marina, நான் இந்த சுதந்திரத்திற்கு ஆதரவாக நிற்பேன் என்று கூறியுள்ளார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.