Apple iPhone 13 manufacturing begins at Chennai: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஐபோன் 13 சீரியஸ் மொபைல்போன்களை தயாரிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தனது மொபைல்போன் சோதனைத் தயாரிப்பைத் தொடங்கிய பிறகு, ஐபோன் நிறுவனம் சென்னையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 13 சீரியஸ் மொபைல்போன்களை இந்தியாவில் இந்தியாவில் தயாரிக்க தொடங்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கும் என்று சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் வணிகரீதியான உற்பத்தி பிப்ரவரியில் தொடங்கும் என்று கடந்த டிசம்பர் மாதம் தகவல் வெளியானது. மன்னதாக ஆப்பிள் ஐபோன் 13 சீரியஸை செப்டம்பர் மாதம் வன்பொருள் நிகழ்வில் அறிமுகப்படுத்தியது. இதில் சிறிய மினி பதிப்பு உட்பட நான்கு மாடல்களைக் கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 13 தயாரிப்பு இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த டிசம்பரில் உணவில் விஷம் கலந்ததாக பெண் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து திட்டம் அபபோது கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
“ஐபோன் 13 சீரியஸ், அதன் அழகிய வடிவமைப்பு, பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான மேம்பட்ட கேமரா அமைப்புகள் மற்றும் A15 பயோனிக் சிப்பின் சிறப்பான செயல்திறன் என ஆப்பிள் நிறுவனத்தின் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்காக இந்தியாவில் தயாரிக்கத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று ஆப்பிள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது ஆப்பிள் ஐபோன்கள் தயாரிப்பு இந்தியாவில் தொடங்கியுள்ளதால், ஆப்பிள் போன்களின் விலை குறையும் என்று எதிர்பார்ப்பபடுகிறது. மேலும் தயாரிப்பு விலையில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக சேமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் இந்தியாவில் ஐபோன் 12 ஐ அசெம்பிள் செய்யத் தொடங்கியது.
இதன் மூலம் ஐபோன் 13 அறிமுகத்திற்குப் பிறகு செப்டம்பரில் ஐபோன் விலையை ரூ. 14,000 குறைக்க வாய்ப்புள்ளது., இருப்பினும், ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 அறிவிப்புக்குப் பிறகு விலைக் குறைப்பைப் பெறுமா அல்லது உடனடியாக விற்பனையைத் தொடங்குமா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஏற்கனவே ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 ஐ ஃபாக்ஸ்கான் ஆலையிலும், ஐபோன் எஸ்இ பெங்களூரில் உள்ள விஸ்ட்ரான் ஆலையிலும் தயாரிக்கிறது. இதன் மதிப்பீடுகளின்படி, ஆப்பிள் இந்தியாவில் விற்கும் ஸ்மார்ட்போன்களில் கிட்டத்தட்ட 70% இந்தியாவிலேயே உற்பத்தி செய்கிறது.
மேலும் இந்தியாவில் அதிக மாடல்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் விரும்புவதாக செய்திகள் உள்ளன. இந்தியாவில் உள்ள ஆப்பிளின் சப்ளையர் தளங்கள் சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலைப் பயன்படுத்துவதாகவும், நிலப்பரப்புகளுக்கு அனுப்பப்படும் எந்தக் கழிவுகளையும் உருவாக்குவதில்லை என்றும் குபெர்டினோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தனது ஆன்லைன் ஸ்டோரை செப்டம்பர் 2020 இல் அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து நாட்டில் அதன் முதல் அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோரைத் தொடங்கத் தயாராகி வருகிறது, இந்த ஸ்டோர் மும்பையில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“