இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS), கடந்த நிதியாண்டில் 1 லட்சம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டில் 40,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
மார்ச் 2022வுடன் முடிவடைந்த நிதியாண்டில் வரலாறு காணாத அளவுக்கு 1,03,546 பேரை பணியமர்த்தியுள்ளது. இது கடந்த 2021ம் நிதியாண்டில் 40,000 பேரை பணியமர்த்தியுள்ளது.
முதல் நாளே ஏமாற்றம் தான்.. சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ்!
மொத்த பணியமர்த்தல்
நிறுவனம் ஒரு காலாண்டில் 35,209 பேரை பணியமர்த்தியுள்ளது. இதே கடந்த நிதியாண்டில் 78,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்தியுள்ளது. இது கடந்த ஆண்டில் 40,000 பேராக இருந்தது. எனினும் நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதமானது பெரும் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது. இது கடந்த நிதியாண்டில் 17.4% ஆக இருந்தது.
பற்றாக்குறையே தொடரும்
இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் 8.6 சதவீதமாக இருந்தது. டிசம்பர் 2021 காலாண்டில் இந்த விகிதமானது 11.9 சதவீதமாகவும் இருந்தது. கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ், அதிகளவிலான பணியமர்த்தலை செய்தாலும், திறமைக்கு பற்றாக்குறையே தொடரும் என்றும் கூறியுள்ளது. நிறுவனங்களின் வலுவான பணியமர்த்தல் திட்டங்கள் கொடுக்கப்பட்டால், 2023ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் அட்ரிஷன் விகிதமானது குறையத் தொடங்கலாம் என எதிர்பார்க்கிறோம்.
மொத்த ஊழியர்கள்
தற்போதைய நிலவரப்படி, கடந்த மார்ச் 31 நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையானது, 5,92, 195 பேராக உள்ளது. எனினும் பிரெஷ்ஷர்களை நடப்பு நிதியாண்டில் பணியமர்த்துவதிலும் நிறுவனம் நம்பிக்கையாக உள்ளது.
நிதி நிலை செயல்பாடு
மார்ச் 2022ல் முடிவடைந்த காலாண்டில் டிசிஎஸ்-ன் வருவாய் விகிதமானது 50,591 கோடி ரூபாயினை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 15.8% ஆக அதிகரித்துள்ளது. இதே கடந்த நிதியாண்டில் 1,91,754 கோடி ரூபாய் வருவாயினை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 16.8 சதவீதம் அதிகமாகும்.
TCS hired over 1 lakh freshers in FY22, its plans to hire 40,000 freshers in FY23
TCS hired over 1 lakh freshers in FY22, its plans to hire 40,000 freshers in FY23/1 லட்சம் பேருக்கு வாய்ப்பளித்த டிசிஎஸ்.. அடுத்த நிதியாண்டில் எத்தனை பேருக்கு வாய்ப்பு தெரியுமா?