இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதால், அரசுக்கு எதிராக மக்கள’ தொடர் போராடடங்களில் ஈடுபட்டு வரும் நிலையில். பிரதமர் மகிந்தா ராஜபக்சே தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அந்நிய செலாவணி மதிப்பு குறைந்ததை தொடர்ந்து மக்கள் விலைவாசி ஏற்றம், மின்வெட்டு உள்ளிட்ட பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் மேலும் இதில் மக்களின் அத்தியாவசிய தேவையான பால், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டுள்ளது. மேலும் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் பதற்றமாக சூழல் நிலைவி வருவதால், இலங்கையில் அமைச்சர்கள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துளளனர். இதனால் இலங்கையில் கோதப்பய ராஜபக்சேவின் அரசு பெரும்பான்மை இழந்துள்ள நிலையில்,முக்கிய எம்பிக்களை சமரசம் செய்யும் முயற்சியில் பிரமர் ராஜபக்சே களமிறங்கியுள்ளார்.
இதனிடையே இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே நாட்டு மக்களுக்காக உரையாற்றி வருகிறார். அவர் தனது உரையில், இலங்கையில் பொருளாதா நெருங்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயராங்களை போக்குவதற்காக தனது அரசு24 மணி நேரமும் உழைத்து வருகிறது. மக்கள் இதனை கருத்தில் கொண்டு போராட்டங்களை கைவிட வேண்டும். மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
மக்கள் தெருக்களில் நடக்கும் போராட்டங்களினால், ஒவ்வொரு நிமிடமும், இலங்கை விலைமதிப்பற்ற வரம்பை இழக்கிறது. எனது குடும்பத்தின் மீது பரப்பப்படும அவதூறுகளை நான் பொறுத்துக்கொள்கிறேன். பாராளும்னற உறுப்பினர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புமாறு போராட்டக்காரர்கள் கூறி வருகின்றனர். பாராளுமன்றத்தை நிராகரிப்பது ஆபத்தானது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“