கபடி உடையுடன் தமிழகத்திற்காக களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின் : வைரல் புகைப்படம்

மதவாத சக்திகளிடம் இருந்து தமிழகத்தை பாதுகாக்கும் முதல்வர் ஸ்டாலின் என்ற பேச்சு வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில்,  அவரை கபடி வீரராக சித்தரித்து வெளியிட்டுள்ள கார்ட்டூன் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சமீப காலமாக இந்துத்துவா என்ற கொள்கை பரலாக பேசப்பட்டு வருகிறது. இந்த பேச்சுக்கு ஒரு சாரார் எதிர்ப்பும் மற்றொரு சாரார் ஆதரவும் அளித்து வரும் நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மதவாத அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.

அதிலும் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வெற்றிக்கு முன்பிருந்தே திமுகவின் கொள்ளை என்று சொல்லப்படும் மதவாத அரசியலுக்கு எதிரான தனது கருத்தை ஆழகமாக பதிவு செய்து வருகிறார் இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்றாக அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் மத்திய உள்துறையில் 70 சதவீதம் இந்தி மொழி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், மாநில மக்கள் தொடர்பு கொள்ளும்போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகினறனர்.

அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் முதல் ஆளாக அமித்ஷாவின் கருத்தக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதில் இந்தி மட்டும் போதுமா இந்தியா வேண்டாமா என்று கேட்டிருந்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த கேள்வி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மதவாத சக்திகளிடம் இருந்து தமிழகத்தை பாதுகாக்கும் முதல்வர் என்று கூறி வருகின்றனர்.

இதில் நெட்டிசன் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தமிழகத்தின் கட்அவுட் முன்பு நிற்கும் ஸ்டாலின், கபடி விளையாட்டு உடையுடன் ரைடுக்கு இருப்பது போல் போஸ் கொடுத்துள்ளார். இந்த பதிவில், மதவாத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டிடை பாதுகாக்கும் நம் முதலமைச்சர் #தளபதியார் .. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.