காபூல்:
ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்துகுஷ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்தது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்…பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு