மருத்துவம் படித்து வந்த காதலி தன்னை ஏமாற்றிவிட்டதால், அவரை பழிவாங்கும் நோக்கில் மருத்துவ கல்லூரி மாணர்களின் லேப்டாப்களை திருடிவந்த இளைஞரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மருத்துவ மாணவர் ருத்ரேஷ் என்பவர் தனது விடுதி அறையில் இருந்து லேப்டாப் திருடப்பட்டதாக கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில், புகார் அளித்து்ளளார்.
இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து லேப்டாப் திருடிச்சென்றவரை கண்டுபிடிக்க வேண்டிய ஆதாரங்களை சேகரித்தனர். இந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு மர்மநபர் ஒரு பையை எடுத்துக்கொண்டு விடுதியில் இருந்து ஆட்டோரிக்ஷாவில் ஏறுவதை கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரிக்ஷாவைக் கண்காணித்து, விசாரணை நடத்தியதை தொடர்ந்து லேப்டாப் திருடிய குற்றவாளி செம்மஞ்சேரியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், தமிழ்ச்செலவன் என்பரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 31 உயர் ரக மடிக்கணினிகளை மீட்டுள்ளனர்.
மருத்துவ கல்லூரி விடுதிகளில் மடிக்கணிணிகளை திருடி, கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்து அதன்மூலம் தமிழ்ச்செல்வன் பிழைப்பு நடத்தி வந்துள்ளார். மேலும் போலி அடையாள அட்டைகளை வைத்திருந்த தமிழ்ச்செல்வன், மீது கேரளா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிகளில் மடிக்கணினி திருட்டு தொடர்பான வழக்குகள் உள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது
இந்நிலையில், தமிழ்ச் செல்வத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், “தனது காதலி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், அதன்பிறகு மருத்துவ மாணவர்களை பழிவாங்கும் நோக்கில், மருத்துவக் கல்லூரி விடுதிகளில் மடிக்கணினிகளைத் திருடத் தொடங்கியதாகவும் கூறியுள்ளார். ஆனால் சிறு வயதில் பெற்றோரை இழந்த தமிழ்ச்செல்வன் சிறு வயதிலிருந்தே அவர் தவறாக வழிநடத்தப்பட்டார், ”என்றும் இவருக்கு சிறுவயதிலிருந்தே திருடும் பழக்கம் இருந்ததுள்ளதாகவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐபிசியின் 380 (திருட்டு) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட தமிழ்ச்செல்வன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் எஸ் யமுனா அவர் ரிமாண்ட் செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டதாக indianexpress.com இடம் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“