பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அதை தங்களது ஊழியர்கள் கண்டு ரசிக்க பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன.
விஜய் நடிப்பில் எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. படத்தின் பாடல்கள், முன்னோட்ட காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தது படக்குழு. இறுதியாக நாளை படம் வெளியாவதால், கொண்டாட்டத்துக்கு இப்போதே தயாராகி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் திரையரங்குகளில் பேனர்கள், கட்அவுட்கள், தோரணைகளை அமைக்கும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் கொட்டும் மழைக்கு இடையில் சுறுசுறுப்பாக பணியில் ஈடுபடும் ரசிகர்கள் பட வெளியிட்டிற்காக ‘வெயிட்டிங்’ என கூறுகின்றனர்.
இந்த நிலையில் பீஸ்ட் பட வெளியீட்டுக்கு பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. பீஸ்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக ஊழியர்கள் ஏராளமானோர் அடுத்தடுத்து விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனை தவிர்க்கும் வகையில் திருப்பூரில் செயல்படும் நிட்பிரைன் என்ற பின்னலாடை நிறுவனம், சென்னை வேளச்சேரியில் உள்ள ஆரா இன்ஃபோமேட்டிக்ஸ் என்ற மென்பொருள் நிறுவனம், பி ட்ரி உள்ளிட்ட நிறுவனங்கள் நாளை விடுமுறை அறிவித்துள்ளன. மேலும் ஊழியர்களுக்கு நிறுவனங்களே பீஸ்ட் படத்துக்கான டிக்கெட்களை இலவசமாக வழங்கி தம்ஸ்-அப் கூறியுள்ளன. இதனால் பணியாளர்கள் ‘ஜாலியோ ஜிம்கானா’ என இப்போதே பீஸ்ட் மோடில் துள்ளல்போட தொடங்கிவிட்டனர்.
இதையும் படிக்கலாம்: நடிகர் விஜய் திரைப்படங்களும் விடாமல் துரத்தும் சர்ச்சைகளும் -துப்பாக்கி முதல் ‘பீஸ்ட்’ வரை