மும்பை:
நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் இந்திய அழைத்து வரப்பட்டார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட புகாரில் சிக்கியுள்ள பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அங்கு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாம் கூசி உத்தரவிட்டார். அதனை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் நிரவ்மோடி தரப்பு மனுதாக்கல் செய்தது.
அந்த மனு, விசாரணைக்கு வந்த போது, நிரவ் மோடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிரவ்மோடி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டால் அங்கு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் மனநல நிபுணர் சான்றிதழ் கொடுத்திருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,578 கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் சங்கரை, சிபிஐ எகிப்தின் கெய்ரோவிலிருந்து மும்பைக்கு அழைத்து வந்தது.