ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்து நழுவிய உக்ரைனின் முக்கிய பகுதிகளில் உள்ள வீடுகளில் விட்டு செல்லப்பட்ட பொருட்கள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 48-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள சில முக்கிய பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து உக்ரைன் மீட்டுள்ளது.
ரஷ்யா அடுத்த தாக்குதல்
இதையடுத்து உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா அடுத்த தாக்குதலுக்காக ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இந்நிலையில் கீவ்வில் உள்ள முக்கிய பகுதிகள் கைகளை விட்டு போல எரிச்சலில் ரஷ்ய வீரர்கள் செய்துள்ள செயல் குறித்து உக்ரைன் எம்.பி லிசியா வாசிலிங்கோ சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கொடிய பரிசு
அவரின் சமூகவலைதள பதிவில், கீவ்வை சுற்றியுள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு நீக்கப்பட்ட நகரங்களில் உள்ள வீடுகளுக்கு உக்ரேனியர்கள் திரும்பும் போது ரஷ்யா அவர்களுக்கு பல கொடிய மற்றும் உயிரை எடுக்கக்கூடிய பரிசுகளை விட்டுச்சென்றுள்ளது.
அதாவது, வீட்டில் உள்ள அலமாரிகள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் கதவுகளில் கண்ணி வெடிகள், வெடிபொருட்களை வைத்துவிட்டு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழப்பை ஏற்படுத்தவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பதையே அவர் கூற வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.