ஒப்போ F21 ப்ரோ சீரிஸ் – எதிர்பார்ப்புகள் என்ன?

ஒப்போ
நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒப்போ வெளியீட்டு நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் நிறுவனம், இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இந்திய நேரப்படி இந்த நிகழ்வு ஒப்போ தளத்தில் மாலை 5 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது.

ஒப்போ எஃப் 21 ப்ரோ 4ஜி மற்றும் ஒப்போ எஃப் 21 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டு வேரியன்டுகள் இந்த நிகழ்வில் அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிடைத்த கூடுதல் தகவல்களின்படி, நிறுவனம் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்கோ ஏர் 2 ட்ரூ வயர்லெஸ் (Enco Air 2 true wireless earbuds) இயர்பட்ஸுன் இன்றைய வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய இயர்பட்ஸ் பல அம்சங்களுடன் 28 மணிநேரம் பேட்டரி சேமிப்புத் திறனைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பெண்களுக்கான ஸ்பெஷல் போன் – வெளியிட காத்திருக்கும் சியோமி

ஒப்போ எஃப் 21 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஒப்போவின் புதிய பிரீமியம் 4ஜி போன், Full HD+ அமோலெட் டிஸ்ப்ளே உடன் வெளியாகலாம். இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ஆக்டாகோர் சிப்செட் நிறுவப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ColorOS கொண்டு இயங்கலாம்.

புதிய ஒப்போ 4ஜி போனில் 8GB ரேம், 128GB ஸ்டோரேஜ் மெமரி வழங்கப்படும். ஸ்டோரேஜை நீட்டிக்க மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவும் இதில் இருக்கும். ஸ்மார்ட்போன் கேமராவைப் பொருத்தவரை, பின்பக்கம் 64MP மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2MP மெகாபிக்சல் டெப்த் சென்சார், 2MP மேக்ரோ கேமரா ஆகிய டிரிப்பிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 32MP மெகாபிக்சல் கேமரா வழங்கப்படலாம். போனை 4500mAh பேட்டரி சக்தியூட்டுகிறது. இதனை 33W பாஸ்ட் சார்ஜிங் ஊக்குவிக்கிறது. ஸ்மார்ட்போன் உடன் சார்ஜர் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஒப்போ எஃப் 21 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்

ஒப்போவின் புதிய ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் Full HD+ அமோலெட் டிஸ்ப்ளே உடன் வெளியாகலாம். இதில் Qualcomm ஸ்னாப்டிராகன் 695 5ஜி ஆக்டாகோர் சிப்செட் நிறுவப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ColorOS கொண்டு இயங்கலாம்.

புதிய ஒப்போ 4ஜி போனில் 8GB ரேம், 128GB, 256GB ஸ்டோரேஜ் மெமரி வழங்கப்படும். ஸ்டோரேஜை நீட்டிக்க மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவும் இதில் இருக்கும். ஸ்மார்ட்போன் கேமராவைப் பொருத்தவரை, பின்பக்கம் 64MP மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16MP மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா ஆகிய டிரிப்பிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 32MP மெகாபிக்சல் கேமரா வழங்கப்படலாம். போனை 4500mAh பேட்டரி சக்தியூட்டுகிறது. இதனை 33W பாஸ்ட் சார்ஜிங் ஊக்குவிக்கிறது. விலையைப் பொருத்தவரை ஒப்போ 4ஜி போன் தொடக்க விலை ரூ.17,999 ஆகவும், ஒப்போ 5ஜி போன் தொடக்க விலை ரூ.20,999 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ Enco Air 2 ப்ரோ சிறப்பம்சங்கள்
Flipkart Sale: ரூ.18,000 மதிப்புள்ள Vivo போன் வெறும் 990 ரூபாய்க்கு கிடைச்சா வேண்டானா சொல்ல முடியும்!

தகவல்களை அலசி பார்க்கும்போது,
Oppo Enco Air 2 Pro
ஆனது 12.4mm டைனமிக் டிரைவர்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) ஆதரவு இதில் இருக்கலாம். புதிய ஒப்போ இயர்பட்ஸ், USB Type-C சார்ஜிங்கிற்கான ஆதரவுடன், 28 மணிநேரம் பேட்டரி பேக்கப்பை வழங்கலாம். இந்தியாவில் இதன் விலை ரூ.3,499 ஆக நிர்ணயிக்கப்படலாம்.

Oppo-F21-Pro-5G விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Mediatek Helio P95 (12 nm)டிஸ்பிளே6.44 inches (16.35 cm)சேமிப்பகம்128 GBகேமரா48 MP + 8 MP + 2 MP + 2 MPபேட்டரி5000 mAhஇந்திய விலை22017ரேம்8 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.