இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்கும் பார்மா துறையில், இந்திய நிறுவனங்கள் தயாரிப்பு உலகம் முழுவதும் பெரிய அளவிலான வரவேற்பு இருக்கிறது.
குறிப்பாக ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் இந்திய பார்மா நிறுவனங்களின் மருந்துகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் மருந்துகளைத் தயாரிப்பதற்காக மூலப்பொருளைப் பெரும்பாலானவற்றை இந்தியா சீனாவிடம் இருந்து தான் வாங்கி வருகிறது.
விளாடிமிர் புதின் சகாப்தம் முடிந்தது..? 2 வருடம் தான்..!!
சீனா ஆதிக்கம்
இந்திய மருந்து தயாரிப்புகள் சீனா மூலப்பொருட்களை அடிப்படையாக வைத்து இயங்க வேண்டி நிலை உள்ளது. குறிப்பாக உற்பத்தி, விலை ஆகியவற்றில் சீன மூலப்பொருட்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஹைதராபாத்
இதை செயல்படுத்தும் வகையில் தென் இந்தியாவின் முக்கிய நகரமாக விளங்கும் ஹைதராபாத்-ல் சுமார் 19000 ஏக்கர் பரப்பளவில், தெலுங்கானா அரசு பிரம்மாண்டமான பார்மா சிட்டியை உருவாக்க முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்திற்காகக் கைப்பற்றப்பட்ட இடத்தில் ஹைதராபாத் பார்மா சிட்டி எனப் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
ஹைதராபாத் பார்மா சிட்டி
சுமார் 8.4 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்க்கும் இந்த 19000 ஏக்கர் பார்மா சிட்டி அமைக்க இறுதி ஒப்புதல் கிடைத்துவிட்டால், வெறும் 2 வருடத்தில் மருந்து பொருட்களைத் தயாரிக்கத் தேவையான முக்கிய மூலப்பொருட்களான பென்சிலின், இப்யூபுரூஃபன், ஆன்டி மலேரியல்ஸ் ஆகியவற்றைத் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டும்.
70% மூலப்பொருட்கள்
இந்திய பார்மா நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்து பொருட்களுக்கான 70 சதவீத மூலப்பொருட்களைச் சீனாவிடம் இருந்து மட்டுமே வாங்கப்படுகிறது. 8.4 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தில் உருவாகும் ஹைதராபாத் பார்மா சிட்டி மூலம் சுமார் மத்திய அரசு சீனாவை நம்பியிருக்கும் நிலையில் இருந்து விடுப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
560000 பேருக்கு வேலைவாய்ப்பு
ஹைதராபாத் பார்மா சிட்டி மூலம் 560000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும். ஏற்கனவே இந்த ஹைதராபாத் பார்மா சிட்டியில் சன் பார்மா, டாக்டர் ரெட்டி லேப்ஸ், சைடஸ் லைப்சையின்ஸ் ஆகியவை உற்பத்தி தளத்தை அமைக்க முன் வந்துள்ள நிலையில், தெலுங்கானா அரசு சுமார் 450க்கும் அதிகமாக இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய பார்மா துறை
இந்தியாவின் 42 பில்லியன் டாலர் மதிப்பிலான பார்மா துறையை “pharmacy of the world” ஆக மாற்ற வேண்டும் என்பது மோடியின் திட்டமாக உள்ளது. ஆனால் சீனா இத்துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த ஆதிக்கத்தைக் குறைக்கச் சில ஆண்டுகள் கடுமையான உழைப்பும், திட்டமிடலும் தேவை.
India breaks China domination in pharma ingredients market with Hyderabad Pharma City
India breaks China domination in pharma ingredients market with Hyderabad Pharma City இனியும் சீனாவை நம்பியிருக்க முடியாது.. மோடி அரசு முடிவால் ஹைதராபாத்-க்கு ஜாக்பாட்..!