மைசூரு : ”பால் விலையை உயர்த்தும் திட்டம், அரசிடமில்லை. அந்தந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு கொடுக்கலாம். இதில் அரசு தலையிடாது,” என கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்தார்.
மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:பால் விலையை, மாநில அரசு உயர்த்தாது. அந்தந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், தங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு கொடுக்கலாம். இதில் அரசு தலையிடாது.இளைஞர் சந்துரு கொலை வழக்கு, சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது, பாராட்டுதலுக்குரியது. உள்துறை அமைச்சர் திறமையானவர்.தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இவ்வழக்கை திறமையாக நிர்வகிக்கிறார்.காங்கிரஸ் தன்னை நிலை நிறுத்திகொள்ள, ஏதாவது ஒரு காரியத்தை செய்யும். ‘நாங்களும் இருக்கிறோம்’ என காண்பிக்க எதையாவது செய்வர்.பதவி காலம் முடிவதற்கு முன்பே, சட்டசபைக்கு தேர்தல் நடக்காது. மைசூரில் நடக்கும் யோகா தினம் நிகழ்ச்சிக்கு வருகை தரும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம், எம்.பி., பிரதாப் சிம்ஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.மைசூரில் மிக சிறப்பாக யோகா நிகழ்ச்சி நடப்பதால், அவர் வருவது மகிழ்ச்சியான விஷயம். மைசூரு மக்கள் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement