தமிழ்நாட்டில் கொரோனா எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
“உருமாறிய, ஒமைக்ரான் XE வைரஸ் ஜூன் மாதத்தில் பரவும் வாய்ப்பு இருப்பதாக வாய்ப்புள்ளதால், அதை எதிர்கொள்ள மக்கள் நல்வாழ்வு துறை எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, அதில் எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் பேசினார்.
இதற்கு விளக்கமளித்து பேசிய மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “புதிய வகை வரைஸ் ஒமைக்ரானை விட 10 மடங்கு வேகமாக பரவினாலும், இங்கிலாந்தில் 627 என்ற அளவிலேதே பாதிப்பு இருப்பது ஆறுதல் தரும் செய்தி. மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாகவே 50-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு இருந்து வருவதாகவும், உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா 3-வது அலையில் தொடர்ச்சியாக பெரிய பாதிப்பு இல்லை. இந்தியாவில் குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் உருமாறிய XE வைரஸ் பரவியது என்று சொன்னாலும் மத்திய சுகாதாரத்துறை இல்லை என்று மறுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் சர்வதேச விமானத்தில் வரும் அனைவரையும் பரிசோதித்து வருகிறோம். கொரோனா பரவல் உருமாறி XE வடிவத்தில் வந்தாலும், எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழ்நாடு அரசு அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. தடுப்பூசி செலுத்தும் பணியை இன்றளவும் இயக்கமாக மாநில அரசு நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா மக்களை அச்சுறுத்தி வந்தாலும், தமிழ்நாட்டில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மேலும், ரூ.365 கோடி மதிப்பீட்டில் அதி நவீன வசதிகளுடன் கூடிய 296 படுக்கை வசதியை நாளை மறுநாள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாகவும் மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM